தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரியில் ஆட்டோ ஓட்டுநர்களின் மனித நேயம் -பொதுமக்கள் பாராட்டு - ஆட்டோ ஓட்டுநர்களின் மனித நேயம்

நீலகிரி: சாலையில் கிடந்த 45 ஆயிரம் ரூபாய் பணத்தை பத்திரமாக காவல்துறையினரிடம் ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனர்களை பொதுமக்கள் மனமார பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.

auto drivers save money

By

Published : Sep 23, 2019, 6:07 PM IST

நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் பகுதியில் வசிப்பவர் கட்டிட தொழிலாளர் சிகாமணி. இவர் நேற்று மாலை 45 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கூடலூர் பழைய பேருந்து நிலையம் அருகே பணப்பையை தவறவிட்டுள்ளார். இந்நிலையில், அவ்வழியாக வந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகி ஜெய்சன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் கீழே கிடந்த பணப்பையை எடுத்தனர்.

அதனை பிரித்துப் பார்த்த போது சுமார் 45 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் கூடலூர் காவல் நிலையத்திற்கு சென்று பணத்தை காவல் உதவி ஆய்வாளரியிடம் ஒப்படைத்தனர். மேலும், பணத்தை பறிகொடுத்த சிகாமணி தகவலறிந்து காவல்நிலையம் சென்று 45 ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டார்.

அப்போது மனநெகிழ்ந்து போன சிகாமணி, இவர்கள் போன்ற மனிதநேயமிக்க ஆட்டோ ஓட்டுநர்கள் இருப்பதை மனதிற்கு மன நிறைவைத் தருகிறது. அவர்களது செயலை பாராட்டி தனது நன்றியை தெரிவித்தார். இவர்களது செயலை காவல்துறையினர் மற்றும் பொதுமக்களும் பாராட்டினர்.

ABOUT THE AUTHOR

...view details