தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில் நியாயவிலைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஒவ்வொரு பகுதிகளிலும் செயல்பட்டு வந்த நியாய விலைக்கடைகள் இனி நமது வீடு தேடி வரும் வகையில் "அம்மா நகரும் நியாய விலை கடை" என்கிற பெயரில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கடந்த 21ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 9 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்தி 501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் 11 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, இவை அனைத்தும் தற்போது செயல்பாட்டிற்கு வந்துள்ளது.