தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஆ.ராசா மீண்டும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார்' - எஸ்.பி. வேலுமணி - Cunnoor

நீலகிரி: குன்னூர் அதிமுக வேட்பாளர் கப்பச்சி வினோத்தை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று (மார்ச்.28) குன்னூர் பேருந்து நிலையம் அருகே பரப்புரையில் ஈடுபட்டார்.

ஆ.ராசா மீண்டும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார், Minister SP Velumani
ஆ.ராசா மீண்டும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளார் எஸ்.பி. வேலுமணி

By

Published : Mar 28, 2021, 12:53 PM IST

நீலகிரி மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள நீலகிரிக்கு வந்த உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கூடலூர், உதகையை அடுத்து குன்னூரில் இன்று பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், "உலக அரங்கில் ஊழல் செய்து தமிழ்நாட்டை தலைகுனிய வைத்த ராசா, தாய்குலத்தை இழிவாகப் பேசி மீண்டும் தலைகுனிய வைத்துள்ளார். திமுக தலைவருக்கு மக்கள் நலனைவிட, முதலமைச்சர் நாற்காலியில் அமர வேண்டும் என்பதே நீண்ட நாள் ஆசையாக உள்ளது.

திமுக ஆட்சியின்போது மழையால் வீடுகளை இழந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக அரசு வீடுகளை வழங்கியது. திமுக ஆட்சியின்போது ஸ்டாலின் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தும் துணை முதல்வராக இருந்தும் ஒன்றும் செய்யவில்லை. நீலகிரி மாவட்டத்தில் மூன்று தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெல்லும்" என உறுதியளித்தார்.

இதையும் படிங்க:ஊழல் இல்லா ஆட்சிக்கு பத்திரம் எழுதித் தரும் கமல்

ABOUT THE AUTHOR

...view details