நீலகிரி: குன்னூரில் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் காட்சி முனையை சுற்றுலாத்துறை அமைச்சர் க.ராமசந்திரன் ஆய்வு செய்தார். அப்போடு அந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான கழிப்பிட வசதி, வாகன நிறுத்துமிடம், அமரும் இருக்கைகள் மற்றும் சாலை வசதி குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதனையடுத்து வனத்துறை அதிகாரிகளிடம் சுற்றுலாத் தளத்திற்கு வரும் சாலை குறித்து தகவல் கேட்டபோது, வனத்துறை அதிகாரி ஒருவர் தவறான தகவலை கூறி உள்ளார். எனவே கோபம் அடைந்த அமைச்சர் அதிகாரியிடம் "விவரம் தெரியாம பேசாதீங்க..” என கடிந்து கொண்டார். இதனிடையே, அருகில் இருந்த அதிகாரிகள் முறையான தகவலை அமைச்சருக்கு கூறினர்.