நீலகிரி:குன்னூர் ஓட்டுபட்டறை ஸ்டான்லி பார்க் பகுதியில் மூன்று நாட்கள் நடைபெறும் முகாமில் கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய ஐந்து மாவட்டங்களைச்சேர்ந்த 300 சாரண, சாரணியர்கள் பயிற்சி பெற உள்ளனர்.
இப்பயிற்சியில் மாநிலங்களின் பண்பாடு, நாட்டுப்பற்று, உதவி புரிவது, நட்பு வட்டாரங்கள் விரிவுபடுத்துவது சாரண, சாரணியர்கள் அணிவகுப்பு மரியாதை போன்றப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இம்முகாமில் 750 சாரண, சாரணியர்கள் பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற உள்ளனர்.