தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 5, 2021, 9:09 PM IST

ETV Bharat / state

சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

நீலகிரி: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மினியேச்சர் குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்கும் காட்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்
சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நுற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இவைகளை காண உள்நாடு, வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஆண்டுதோறும் கோடை சீசன் மற்றும் 2ஆவது சீசனில் (டிசம்பர்- ஜனவரி) சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு லட்சக்கணக்கான நாற்றுக்கள் நடவு செய்யப்படுகின்றன.

நீலகிரி வனப்பகுதிகளில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர்கள் பூக்கிறது. இங்கு ஏற்கனவே குறிஞ்சி மலர் நாற்றுகள் நடவு செய்து வளர்க்கப்பட்டு வரும்நிலையில் தற்போது ஸ்டபிலான்தஸ் மினியேச்சர் வகை நீலக்குறிஞ்சி மலர்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. இது சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் குறிஞ்சி மலர்கள்

பூங்காவில் படகு இல்லம், இந்திய வரைபடம், நுழைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் இந்தக் குறிஞ்சி மலர்கள் பூத்து குலுங்குகின்றன. சிம்ஸ் பூங்காவில் வீரிய ரகத்தில் வளர்க்கப்பட்ட இந்தச் செடிகள் சுற்றுலா பயணிகளை பெரிதும் வசீகரிக்கின்றன.

இதையும் படிங்க:குன்னூரில் சுவரில் துளையிட்டு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details