தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விமானப் படையில் பணியாற்றும் பைலட்டுகளுக்கான பயிற்சி - nilgiris

நீலகிரி: இந்திய விமானப் படை பைலட்களுக்கான ஹெலிகாப்டர் பயிற்சி குன்னூரில் நடைபெற்றது.

ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்

By

Published : Jul 21, 2021, 1:36 AM IST

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டர் மற்றும் ராணுவ பயிற்சி கல்லூரி உள்ளது. மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் ராணுவ வீரர்களுக்காக பயிற்சி அளிக்கப்பட்டு எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

இதேபோல ராணுவ பயிற்சி கல்லூரியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம் அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. மேலும் ஹெலிகாப்டர் பைலட் பயிற்சியும் அவ்வப்போது குன்னூர் பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய விமானப்படை பிரிவுக்கான ஹெலிகாப்டர் பயிற்சி நேற்று காலை முதல்அளிக்கப்பட்டது. இதில் மலைப்பகுதிகளில் எவ்வாறு ஹெலிகாப்டர்களை இயக்குவது. மரங்கள் உள்ள பகுதிகளில் கொண்டு செல்லும் வழிமுறைகள், இடைப்பட்ட பகுதியில் ஹெலிகாப்டரை நிறுத்தும் பயிற்சி, தரை இறக்கும் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details