மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டிக்கு கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயில் இயக்கப்படுகிறது. கரோனா பொதுமுடக்கத்தால் கடந்த மார்ச் மாதம் முதல் உதகை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிவரை 46.5 கிலோ மீட்டர் கொண்ட இந்த மலை ரயில் பாதையின் இரு புறங்களிலும் அழகிய இயற்கை காட்சிகள் காணப்படுகின்றன.
மலை ரயில் பயணத்தின்போது வனப்பகுதியில் உலாவும் காட்டு விலங்குகள் கண்டு ரசிக்கலாம். செங்குத்தாக செல்லும் இந்த தண்டவாளத்தில் ரயில் பயணம் செய்வது புதுமையான அனுபவத்தை கண்டு ரசிக்கவே சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் கடந்த 9 மாதங்களுக்கு பிறகு இன்று(டிச.31) மலைப்பாதை ரயில் சேவை தொடங்கியது.
மேட்டுப்பாளையத்திலிருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்ட மலை ரயில் 10.15 மணிக்கு குன்னூர் வந்தடைந்தது. இதில் ஊட்டிவரை 250 சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். முகக்கவசம் அணிந்து விதிமுறையை பின்பற்றி சுற்றுலா பயணிகள் பயணம் செய்தனர். நீண்ட நாள்களுக்கு பிறகு இயக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் புகைப்படங்கள் எடுத்து, இயற்கை காட்சிகளை ரசித்து மகிழ்ச்சியடைந்தனர்.
மலைப்பாதை ரயில் சேவை தொடக்கம் ஏற்கனவே இயக்கப்பட்ட நேரங்களில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி இடையே தலா ஒரு முறையும், குன்னூர், ஊட்டி இடையிலும் தலா 3 டிரிப்களும் என பழைய முறைப்படி இயக்கப்படுகிறது. அனைத்தும் முன்பதிவுடன் கூடிய சிறப்பு ரயிலாக இயக்கப்படுகிறது.
இதையும் படிங்க:சிபிஎஸ்இ பொதுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு