நீலகிரி மாவட்டம் உதகையில் நகராட்சி சந்தை செயல்பட்டு வருகின்றது. இங்கு மளிகைக் கடை, பழக்கடை, டீ கடை, ஜவுளிக் கடை உள்ளிட்ட 1500க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், உதகை, அதை சுற்றியுள்ள பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருள்களை நகராட்சி சந்தையில் வாங்கிச் செல்வது வழக்கம்.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் காரணமாக நகராட்சி சந்தை மூடப்பட்ட நிலையில், கடந்த மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடந்த வாரம் நடைபெற்ற சந்தையில் காய்கறி வியாபாரி மூலம் 10க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியதால், ஆகஸ்ட் 6ஆம் தேதி முதல் சந்தை மூடப்பட்டது.