தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கனமழை காரணமாக மேரக்காய் விவசாயம் பாதிப்பு - விவசாயிகள் வேதனை - The nilgirs district news

நீலகிரி: கனமழை பெய்து வருவதன் காரணமாக மேரக்காய் விவசாயம் பாதித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மேரக்காய் விவசாயம் பாதிப்பு

By

Published : Oct 23, 2019, 10:44 AM IST

நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கும் மலைத்தோட்ட காய்கறி வகைகளில் குறைந்த முதலீட்டில் கூடுதல் வருமானம் தருவது மேரக்காய். இதைப் பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த ஒரு வருடமாக மழை இல்லாததால் மலை தோட்ட காய்கறி விவசாயம் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இதேபோல் மேரக்காய் பயிரிட்ட விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.

மேரக்காய் விவசாயம் பாதிப்பு

குறிப்பாக குன்னூர், ஜெகதளா, கொலகோம்பை, தூதூர் மட்டம், உபதலை உள்ளிட்ட பகுதிகளில் 1,000 ஏக்கரில் விவசாயிகள் மேரக்காயை பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பயிரிட்டுள்ள காய்கறிகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் சேதமடைந்த பயிர்களை தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: கனமழை காரணமாக சுமார் 50 வீடுகள் சேதம்!

ABOUT THE AUTHOR

...view details