நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தோட்டக்கலைத்துறையின் பழப்பண்ணை உள்ளது. இந்த பழப்பண்ணையில் பல்வேறு வகையான பழமரங்கள் உள்ளன. இதில், குறிப்பாக ஜப்பான் நாட்டின் தேசிய பழமான பெர்சிமென் பழ மரங்கள் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பெர்சிமென் பழ சீசன் தொடங்கும். இந்நிலையில் இந்தாண்டுக்கான பழ சீசன் தொடங்கியுள்ளது. இந்த பழங்களை ஆதாம், ஏவாள் பழம் என்றும் அழைக்கின்றனர். இந்த பழம் வைட்டமின்-ஏ, சி, சத்து நிறைந்த மருத்துவ குணம் வாய்ந்தது. கேன்சர் உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வருவதால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. மருத்துவ குணமுள்ள பெர்சிமென் பழ சீசன் தொடக்கம் இந்தப் பழங்களைப் பறித்து ஒரு நாள் முழுவதும் எத்தனால் திரவத்தில் ஊறவைத்து, கழுவி அதன் பிறகே சாப்பிடவேண்டும். தற்போது குன்னூர் பழப்பண்ணையில் கிலோ 165 ரூபாய்க்கு பெர்சிமென் பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் நேரடியாக இங்கு வந்து வாங்கிச் செல்லலாம் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.