தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிபின் ராவத் உயிரிழப்பு: மருத்துவ பல்நோக்கு மையம் அமைக்கும் பணிகள் தொடக்கம்

தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து மீட்பு பணியில் உதவிய நஞ்சப்பசத்திரம் கிராம மக்களுக்கு ராணுவத்தின் சார்பில் மருத்துவ பல்நோக்கு மையம் அமைக்கும் முதற்கட்ட பணிகள் நேற்று (பிப்.11) தொடங்கின.

பிபின் ராவத் உயிரிழப்பு: மருத்துவ பல்நோக்கு மையம் அமைக்கும் பணிகள் தொடக்கம்
பிபின் ராவத் உயிரிழப்பு: மருத்துவ பல்நோக்கு மையம் அமைக்கும் பணிகள் தொடக்கம்

By

Published : Feb 12, 2022, 11:33 AM IST

நீலகிரி: குன்னூர் அருகே உள்ள நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதைப் பார்த்தவுடன் நஞ்சப்பசத்திரம் கிராம மக்கள் உடனடியாக வீரர்களை மீட்க முயற்சித்தனர்.

அப்போது ஹெலிகாப்டரில் பற்றியெரிந்த தீயை வீடுகளில் இருந்த நீரைக் கொண்டு அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து காவல் துறையினர், ராணுவத்தினருக்கு உடனடியாகத் தகவல் தெரிவித்ததுடன், அவர்களுடன் இணைந்து மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர்.

வீரர்களை மீட்டுக் கொண்டுசெல்ல தங்கள் வீடுகளில் இருக்கும் போர்வைகள், கம்பளிகளை கொடுத்து மீட்புப் பணிக்கு உதவினர். எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் மனிதநேயத்துடன் நடந்துகொண்ட கிராம மக்களின் செயல் அனைவரது இதயத்தையும் ஈர்த்தது.

இதனையடுத்து, கிராம மக்களுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் ராணுவம் சார்பில் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் 20 அடிக்கு, 15 அடி எனும் அளவிற்கு மருத்துவ பல்நோக்கு மையம் அமைக்கும் முதற்கட்ட பணிகள் நேற்று (பிப்.11) தொடங்கின. இப்பணிகளை குன்னூர் வருவாய், தோட்டக் கலைத் துறையினருடன் இணைந்து ராணுவத்தினர் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:மணல் கடத்தலில் கைது செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 6 பேருக்கு மீண்டும் ஜாமின் மறுப்பு

ABOUT THE AUTHOR

...view details