கரோனா அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. சுகாதாரத்துறையின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளித்து சுற்றுப்புறத்தை பராமரிக்கின்றனர்.
தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை! - cleaning workers
நீலகிரி: கரோனாவை எதிர்க்கும் போராடத்தில் கடினமாகவும் அர்ப்பணிப்போடும் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
குன்னூர் நகராட்சியை சேரந்த 163 தூய்மைப் பணியாளர்கள், அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களிலும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்திவருகின்றனர். இதுபோன்ற இக்கட்டான சூழலில் அவர்களையும் பெருந்தொற்று தாக்கும் அபாயமுள்ளது. ஆதலால், சுழற்சி முறையில் அனைத்து பணியாளர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.
குன்னூர் ஒட்டுப்பட்டரை பகுதியிலுள்ள சுகாதார மையத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு கரோனா முன்னெச்சரிக்கையாக மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சுகாதாரத்துறை அலுவலர் செல்வராஜ் உள்பட அனைத்து பணியாளர்களும் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.
இதையும் படிங்க: இந்திய பங்குச் சந்தையில் தொடரும் வீழ்ச்சி!