தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட்! - maoist danish

நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மாவோயிஸ்ட் டேனிஷ், அரசுக்கு எதிராக எதிராக முழக்கமிட்டதால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

maoist danish ajar in ooty district court

By

Published : Nov 22, 2019, 2:25 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை அருகே நெடுகல்கொம்பை கிராமம் உள்ளது. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த கிராமத்திற்குச் சென்று மாவோயிஸ்ட் இயக்கத்தினர் அரசுக்கு எதிராக கூட்டம் போட்டு மக்களிடம் பேசியதாகவும், அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியதாகவும் கூறி மாவோயிஸ்ட் டேனிஷ் என்பவர் மீது நெடுகல்கொம்பை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

தற்போது கேரள சிறையில் இருக்கும் டேனிஷ் இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வடமலை, வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 20ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்ற வளாகத்தில் முழக்கமிட்ட மாவோயிஸ்ட் டேனிஷ்

இதனையடுத்து வெளியே வந்த டேனிஷ், சமீபத்தில் கேரள தண்டர்போல்ட் படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்ட் மாணிவாசகம் உள்ளிட்டோருக்கு வீரவணக்கம் என்று முழுக்கங்களை எழுப்பினர். இதனால் நீதிமன்றம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: காவல்துறையால் அடித்து துன்புறுத்தப்பட்ட மாவோயிஸ்ட் - வழக்கறிஞர் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details