தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மேற்கத்திய கல்வி முறைக்கு நாம் அடிபணியக் கூடாது' - மைத்திரி விக்கரம்சிங்க! - ஊட்டி பள்ளி விழாவில் மைத்திரி விக்கரம்சிங்கே

நீலகிரி: கிழக்கு, மேற்கத்திய நாடுகளால் திணிக்கப்படும் கல்வி முறைக்கு அடிபணிந்து நமது பாரம்பரிய கல்வி முறையை விட்டுவிட கூடாது என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கயின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரம்சிங்க வலியுறுத்தியுள்ளார்.

ooty school program

By

Published : Oct 16, 2019, 8:43 PM IST

நீலகிரி மாவட்டம் உதகை அருகே முத்தொரை பாலாடாவில் உள்ள சர்வதேச தனியார் பள்ளியில் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் 20 நிமிடம் இசைத்த சிம்பொனி இசை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பரத நாட்டியம், பஞ்சபூத நடனம், தாண்டியா நடனம், மேற்கத்திய இசை உள்ளிட்டகலை நிகழ்ச்சிகளையும் பள்ளி மாணவர்கள் நடத்தினார்கள். இந்த நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கயின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க பள்ளி மாணவர்களின் திறமையை கண்டு வியந்தார்.

பின்னர் மாணவர்களிடையே பேசிய அவர், "மதிப்பில் உயர்ந்த கல்வி மாணவர்களின் எதிர்காலத்திற்கு அவசியம். சர்வதேச அளவில் கல்வித் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன. தொடக்க காலத்தில் இந்தியாவில் குருகுலக் கல்வி முறை இருந்தது. ஆனால் இன்று பல்வேறு மாற்றங்களின் விளைவாக கணினி அடிப்படையில் நவீன கல்வி முறை நடைமுறைக்கு வந்துள்ளது. கிழக்கு, மேற்கத்திய நாடுகளால் திணிக்கப்படும் கல்வி முறைக்கு அடிபணிந்து நமது பாரம்பரிய கல்வி முறையை விட்டுவிட கூடாது. இந்தக் கல்வி முறையையே இங்கிலாந்து, ஜப்பான், ஸ்வீடன், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் கற்றுத் தரப்படுகிறது” என்றார்.

பள்ளி நிகழ்ச்சியில் மைத்திரி விக்கரம்சிங்கே

இதையும் படிங்க:இந்தியா எச்சரித்தது: இலங்கை பிரதமர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details