தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீலகிரி புலியை கொல்ல வேண்டாம்- உயர் நீதிமன்றம் - Madras high court against order to hunt Mudumalai's man-eater tiger

Madras high court against order to hunt Mudumalai's man-eater tige
Madras high court

By

Published : Oct 5, 2021, 12:10 PM IST

Updated : Oct 5, 2021, 12:37 PM IST

12:00 October 05

நீலகிரியில் தேடப்பட்டுவரும் புலியை கொல்ல வேண்டாம் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

புலியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை

சென்னை : நீலகிரி மாவட்டம் கூடலூர் தேவன் தனியார் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (51) என்பவரை செப்டம்பர் 24ஆம் தேதி தாக்கி கொன்ற புலியை, மயக்க ஊசி செலுத்திப் பிடிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இதுவரைப் புலியைப் பிடிக்க முடியவில்லை.

புலியை மயக்க ஊசி செலுத்திப் பிடிப்பது உள்பட அதை வேட்டையாடுவதற்கான உத்தரவை முதன்மைத் தலைமை வன உயிரினப் பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ் பிறப்பித்துள்ளார். இதனை எதிர்த்து உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா டோக்ரா என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்தார்.

அவர் தாக்கல்செய்த மனுவில், குறிப்பிட்ட அந்தப் புலி ஆட்கொல்லி என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனவும், புலியை வேட்டையாடுவது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்கும் முன் உரிய சட்டவிதிகளை வனத் துறை பின்பற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நேற்று (அக்டோபர் 4) தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது.

நீதிபதிகள் இந்த வழக்கை அக்.5 விசாரிப்பதாகத் தெரிவித்தனர். அதன்படி, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "நீலகிரியில் உலவும் T23 புலியை கொல்லும் திட்டம் ஏதும் இல்லை. புலியை உயிருடன் பிடிக்கவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என தமிழ்நாடு வனத்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, "தேடப்படும் புலி ஆட்கொல்லி புலியாக இல்லாமலும் இருக்கலாம், நீலகிரியில் தேடப்பட்டுவரும் புலியை கொல்ல வேண்டாம். புலியைப் பிடிக்கும்போது மற்ற விலங்குகளுக்கு இடையூறு கூடாது" என்றார். இதையடுத்து, புலியை பிடிப்பது குறித்த அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

Last Updated : Oct 5, 2021, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details