தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார்.. உயிர் தப்பிய பயணிகள்! - Nilgiris District News

மலை பாதையில் திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு காரில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.

திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார்
திடீரென தீப்பற்றி எரிந்த சொகுசு கார்

By

Published : Mar 10, 2021, 9:22 AM IST

Updated : Mar 10, 2021, 10:27 AM IST

நீலகிரி மாவட்டம் கல்லட்டி மலை பாதையில் பெங்களூருவை சேர்ந்த 5 பயணிகள் சொகுசு கார் ஒன்றில் நேற்று (மார்ச் 9) மசினகுடியிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்கு சென்றனர்.

தீப்பற்றி எரியும் சொகுசு கார்

அப்போது, 8ஆவது கொண்டை ஊசி வளைவில் செல்லும் போது திடீரென காரில் தீப் பற்றியதால், பயணிகள் அனைவரும் காரை நடு சாலையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடினர்.

காரில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தால் கல்லட்டி மலைப்பாதையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க:தேர்தல் செலவின பார்வையாளர்களின் தொலைபேசி எண்கள் வெளியீடு

Last Updated : Mar 10, 2021, 10:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details