தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மின்கம்பங்கள் வழியாக தரையில் பாய்ந்த மின்சாரம் - வனவிலங்குகள் உயிரிழப்பு - நீலகிரியில் மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்த வனவிலங்குகள்

நீலகிரி: உயர் அழுத்த மின்கம்பியில் இருந்து மின் கம்பம் மூலம் மின்சாரம் பாய்ந்து ஒரு யானை, 5 காட்டுப் பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கருகி உயிரிழந்தன.

elec
elec

By

Published : Feb 26, 2020, 4:54 PM IST

நீலகிரியில் சிங்காரா மின் நிலையத்திலிருந்து கூடலூர் வழியாக கேரளாவின் கள்ளிக்கோட்டை பகுதிக்கு உயர் அழுத்த மின் கம்பிகள் மூலம் மின்சாரம் கொண்டுச் செல்லப்படுகிறது. பெரும்பாலும் வனப்பகுதியில் தான் இந்த மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சில நாட்களுக்கு முன்பு, சேரம்பாடி அருகே வனப்பகுதியில் ஒரு மின் கோபுரத்திலிருந்த மின் கம்பிகளில் மின்சாரம் பாயாமல் பீங்கான்கள் உள்ளன. அவை திடீரென்று வெடித்து உடைந்ததில் மின்கம்பங்கள் வழியாக தரை மற்றும் செடிகளுக்கு மின்சாரம் பயந்தது.

மின்கம்பங்கள் வழியாக தரையில் பாய்ந்த மின்சாரம்

அச்சமயத்தில், மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த ஒரு யானை, ஐந்துக்கும் மேற்பட்ட காட்டு பன்றிகள், கீரி மற்றும் ஏராளமான காகங்கள் கருகி உயிரிழந்தன. இதையடுத்து, இன்று அப்பகுதியில் ரோந்து பணிக்குச் சென்ற வன ஊழியர்கள், துர்நாற்றம் வீசுவதை கண்டு சோதனை செய்ததில் வனவிலங்கு, பறவைகள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்ரனர். மின்கம்பிகள் அறுந்து விழுந்து ஒரே நாளில் வனவிலங்குகள், பறவைகள் இறந்தது அப்பகுதி வன ஆர்வலர்களிடயே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 308 கிலோ கஞ்சா பறிமுதல்: இரண்டு பேர் கைது

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details