நீலகிரி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் உதகையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
லாரி உரிமையாளர்கள் சந்திக்கும் சிக்கல்கள்
நிகழ்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தலைவர் நடராஜன்,” நீலகிரி மாவட்டத்தில் 2 ஆயிரத்து 700 லாரிகள் உள்ளன. அவற்றை இயக்குவது பெரும் சவாலாக உள்ளது. லாரிகளுக்கு வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் குறிப்பிடும் நிறுவனத்திடம் தான் வேகக்கட்டுபாட்டு கருவி, ஸ்டிக்கர்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என கட்டாயபடுத்துகின்றனர். இதனால் செலவினம் அதிகரிக்கிறது” என்றார்.
அபராதம் விதிப்பு
காவல் துறையினர் லாரிகளுக்கு ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும். ஆன்லைனில் ஆபராதம் விதிக்கும்போது லாரி ஓட்டுநர் தலைக்கவசம் அணியவில்லை என்று குறிப்பிட்டு அபராதம் விதிக்கிறனர். இது வேடிக்கையாக இருக்கிறது என சங்கத்தலைவர் நடராஜன் குற்றஞ்சாட்டினார்.