நீலகிரி: தமிழ்நாடு - கர்நாடகா எல்லையிலுள்ள கக்கநல்லா சோதனைச்சாவடி வழியாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சரக்கு வாகனங்கள் வந்துசெல்கின்றன.
தற்போது கரோணா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக எல்லைப் பகுதிகளில் வாகனங்களில் வரும் பயணிகளுக்கு இ-பாஸ், ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்கமாக சென்றுவரும் சரக்கு வாகனங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை.
கர்நாடக அலுவலர்களுடன் வாக்குவாதம்
இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 07) தமிழ்நாடு பகுதிகளில் மட்டுமின்றி கேரளாவில் இருந்து சென்ற சரக்கு வாகனங்களை கர்நாடக எல்லையில் இருந்த கர்நாடக காவல் துறை, வனத்துறை, வருவாய் துறை அலுவலர்கள் உள்ளே விட மறுத்தனர்.
ஆர்டிபிசிஆர் பரிசோதனை சான்றிதழ் உள்ளவர்களை மட்டுமே விட முடியும் என கூறியதால் லாரி ஓட்டுநர்கள் அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.