தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி கவிழ்ந்து விபத்து: 17 தொழிலாளர்கள் படுகாயம்

உதகை அருகே கேரட் ஏற்றிவந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் லாரியின் மீது அமர்ந்திருந்த 17 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர்.

lorry-accident-in-nilgris
lorry-accident-in-nilgris

By

Published : Jul 20, 2021, 6:56 PM IST

நீலகிரி: உதகை அருகே உள்ள போர்த்தியாடா பகுதியைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட கேரட் தொழிலாளர்கள் இன்று (ஜூலை 20) இத்தலார் பகுதியில் கேரட் அறுவடைசெய்து அதனைக் கழுவி சுத்தம்செய்ய லாரியில் ஏற்றிக்கொண்டு அப்பக்கோடு பகுதிக்குச் சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, எல்லக்கண்டி என்ற இடத்தின் அருகே லாரி வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியின் மீது அமர்ந்துவந்த 17 தொழிலாளர்களுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து,அருகில் இருந்தவர்கள் அனைவரையும் மீட்டு உதகை தலைமை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

லாரி கவிழ்ந்து விபத்து

கேரட் லாரிகளில் தொழிலாளர்களை ஏற்றிச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ள நிலையில், விதிகளை மீறி அளவுக்கு அதிகமான பாரத்துடன் தொழிலாளர்களை ஏற்றிவந்ததே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

இது குறித்து எமரால்டு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க: பாலிடெக்னிக்கில் சேர விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ABOUT THE AUTHOR

...view details