தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு? - lorry accident at railway track in coonoor

நீலகிரி: குன்னூர் ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ரயில் போக்குவரத்து பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

lorry accident at railway track in coonoor
ரயில் பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் ரயில் போக்குவரத்து பாதிப்பு?

By

Published : Mar 11, 2020, 1:10 PM IST

நீலகிரி மாவட்டம் உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த லாரி குன்னூர் லெவல் க்ளாஸ் பகுதி அருகே சென்றபோது நிலை தடுமாறி ரயில் பாதையில் விழுந்தது.

இந்த விபத்தில் ஓட்டுநர் பரத் நல்வாய்ப்பாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து ரயில் பாதையில் விழுந்துள்ள லாரியை அகற்றும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தின் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details