தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதிப்பு - தமிழ்நாடு தற்போதைய செய்திகள்

நீலகிரி: மகளை பாலியல் வன்புணர்வு செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உதகை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மகளை பாலியல் தொந்தரவு செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை
மகளை பாலியல் தொந்தரவு செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

By

Published : Feb 20, 2021, 9:28 AM IST

நீலகிரி மாவட்டம் கூடலூர் கோத்தர்வயல் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் நாசர் (44). இவருக்குத் திருமணமாகி மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் மனைவி இல்லாத நேரத்தில் அப்துல் நாசர் மகளை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்தார்.

மேலும் மகளிடம் இது குறித்து தாயிடமோ, உறவினர்களிடமோ கூறினால் கொலைசெய்து விடுவேன் என அவர் மிரட்டினார். இதற்குப் பயந்து அச்சிறுமி யாரிடமும் கூறாமல் இருந்தார். சிறுமியின் தாய் வழி தாத்தா வீடு கேரளாவில் உள்ளது.

அங்கு அப்துல் நாசர் தனது குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறுமி தாத்தாவிடம் நடந்ததைக் கூறினார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தார்.

பரிசோதனையில் சிறுமியின் உடலில் காயங்கள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்போரில் அப்துல் நாசரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இந்த வழக்கு உதகை மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அருணாச்சலம், குற்றவாளி அப்துல் நாசருக்கு ஆயுள் தண்டனை, 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பாலுறவுக்கு கூப்பிட்ட இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பெண்: வைரல் காணொலி!

ABOUT THE AUTHOR

...view details