தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாய்களைப் பிடிக்க குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை - பீதியில் மக்கள் - குன்னூர் சிறுத்தை

நீலகிரி: குன்னூர் அருகே நாய்களைப் பிடிப்பதற்காக சிறுத்தை ஒன்று குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

leopard enters Coonoor

By

Published : Nov 13, 2019, 11:16 PM IST


நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே டிரம்ளா எஸ்ட்டேட் பகுதி உள்ளது. இந்தப் பகுதியைச் சுற்றிலும் தேயிலைத் தோட்டங்களும் காடுகளும் நிறைந்துள்ளன.

காடுகளிலிருந்து காட்டெருமை, கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குள் தண்ணீர், உணவு ஆகியவற்றைத் தேடி இரவு நேரங்களில் இந்தக் குடியிருப்புப் பகுதிக்கு வருவது வழக்கம்.

இதேபோல், இன்றும் நாய்களைப் பிடிப்பதற்காக சிறுத்தை ஒன்று அங்குள்ள குடியிருப்புப் பகுதியில் நுழைந்தது. அப்போது, சாலையில் ஓடிவந்த சிறுத்தையின் சத்தத்தைக் கேட்டு பயந்த நாய்களும் குலைத்ததால், வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்து கூச்சலிட்டனர். அதனைக் கண்ட சிறுத்தை நாய்களை பிடிக்காமல் காட்டுக்குள் ஓடி மறைந்தது.

சிசிடிவி காட்சிகள்

இந்தச் சம்பவம் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகிவுள்ளது. பகல் நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்குள் சிறுத்தை நுழைந்த சம்பவத்தால் அப்பகுதியினர் பீதியடைந்துள்ளனர்.

இதையும் வாசிங்க : புதிய கோரிக்கைகளை சிவசேனா முன்வைக்கிறது - அமித் ஷா

ABOUT THE AUTHOR

...view details