நீலகிரி: குன்னூரில் சுற்றித் திரிந்த இரண்டு சிறுத்தைக் குட்டிகளின் படம் வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
குன்னூரில் கிளிக்கிய அழகிய சிறுத்தைக் குட்டிகள் - சிறுத்தை குட்டிகள்
குன்னூர் பகுதியில் வலம் வந்த இரண்டு அழகிய சிறுத்தைக் குட்டிகளை வனத் துறையினர் படம் பிடித்துள்ளனர். இந்நிலையில், சிறுத்தைக் குட்டிகளின் நடமாட்டம் இருப்பதால், அவற்றின் தாயும் அப்பகுதிகளில் சுற்றி வரலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

குன்னூர் பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தற்போது இரண்டு சிறுத்தைக் குட்டிகள் அப்பகுதியில் வலம் வந்ததை அப்பகுதி வனத்துறையினர் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்நிலையில், இக்குட்டிகளின் தாய் சிறுத்தை அப்பகுதியில் இருக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இவை சிறுத்தைப் பூனை இனத்தைச் சேர்ந்தவைகள் என்றும் பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் கூறியுள்ள வனச் சரகர் சசிகுமார், சிறுத்தை ஏதேனும் அப்பகுதியில் தென்பட்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.