நீலகிரி: தமிழ்நாட்டில் நிலச்சரிவால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் எண்ணிக்கை 4,170ஆக உள்ளன. அவற்றில் மலை மாவட்டமான நீலகிரியில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 284 என கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் உதகையில் உள்ள கோடப்பமந்து, மரப்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் நவீன தொழில் நுட்பத்தினால் நிலச்சரிவைத் தடுக்கும் மாதிரி திட்டத்தை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கிவைத்தார்.