மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம், குன்னூருக்கு நாள்தோறும் இயக்கப்படும் மலை ரயில் மட்டுமின்றி, சிறப்பு மலை ரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன. சமீப காலமாக, மலை ரயிலில் பயணம் செய்யும் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மலைப்பகுதியில் இயக்கப் படக்கூடிய மலை ரயில்களில் பல்வேறு இயந்திரக் கோளாறு காரணமாக, தினமும் சுமார் மூன்று மணி நேரம் தாமதமாக வருகின்றன.
மலை ரயில்களின் தாமதத்தால் சுற்றுலாப் பயணிகள் அவதி
நீலகிரி: மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்படு மலை ரயில்களில் ஏற்படும் எஞ்சின் கோளாறால் குன்னூருக்கு சரியான நேரத்தில் வருவதில் ஏற்படும் தாமதத்தால் சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மலை ரயில்களின் தாமதத்தால் சுற்றுலாப் பயணிகள் அவதி
இதனால், சுற்றுலாப் பயணிகள் மிகவும் சோர்வடைந்து உணவு மற்றும் குடிக்க நீரின்றி அவதிக்குள்ளாகின்றனர். எனவே, கோடை விடுமுறையில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் நிலையில், மலை ரயிலை காலதாமதமின்றி குறிப்பிட்ட நேரத்தில் இயக்க வேண்டும் என்று உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.