நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்குட்பட்ட உதகமண்டலத்தில் குன்னூர், கூடலூர், மேட்டுப்பாளையம், கோத்தகிரி, உதகை உள்ளிட்ட பணிமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், கோத்தகிரி பணிமனையில் சுமார் 80 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், இப்பணிமனையில் பேருந்துகளை நிறுத்துவதற்கு போதிய இடமில்லாமல், சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், உதகை மண்டல பொது மேலாளர் மோகன், குன்னூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமுவிடம் கலந்து ஆலோசித்து கோத்தகிரி அருகே பாண்டியன் பார்க் பகுதியில் சுமார் 1.52 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து, கோத்தகிரி நில அளவையர்கள் மூலம் நில அளவீடு செய்யும் பணியை போக்குவரத்துத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.