நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள மூன்று கிராமத்தைச் சேர்ந்த சுப்பன் என்பவரது மகள் பேபி(42). இவருக்கு திருமணம் ஆகவில்லை. பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை தனது வீடு அருகே உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு சென்றிருக்கிறார்கள். அப்போது, புதர் மறையில் இருந்து காட்டெருமை ஒன்று திடீரென பேபியை தாக்கிவிட்டு தப்பியோடியது.
காட்டெருமை தாக்கி பெண் பலி இதில், படுகாயமடைந்த பேபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்த பின், குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து, பேபியின் குடும்பத்தினருக்கு முதல் கட்டமாக 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்குவதாக வனத்துறையினர் உறுதியளித்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக கோத்தகிரி பகுதியில் காட்டு எருமை நடமாட்டம் அதிகரித்து வருவதால், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.