தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலாத் தலங்களை திறக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை! - வியாபாரிகள் கோரிக்கை

நீலகிரி: குன்னுார் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களைத் திறக்க வேண்டுமென அப்பகுதி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Coonoor
Coonoor

By

Published : Aug 27, 2020, 1:24 PM IST

நீலகிரி மாவட்டம், சிறந்த சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. இந்த மாவட்டமானது சுற்றுலாத் தொழிலை நம்பியுள்ள மாவட்டமாகும்.

இதனை நம்பி, சுற்றுலா ஓட்டுநர்கள், தங்கும் விடுதிப் பணியாளர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலாத் தலங்களில் கடைகள் வைத்துள்ள சிறு வியாபாரிகள் என சுமார் 2 லட்சம் பேர் வரை உள்ளனர்.

ஊட்டிக்கு அடுத்து, குன்னூர் முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது. இங்கு குன்னூர் டால்பின் நோஸ், லேம்ஸ் ராக், சிம்ஸ் பார்க் உள்ளிட்டப் பல சுற்றுலா மையங்கள் அமைந்துள்ளன.

இந்நிலையில், கரோனாவால், சுற்றுலாத் தலங்கள் 150 நாட்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதனால் சுற்றுலாவை நம்பி பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த படிப்படியாக சுற்றுலா மையங்களைத் திறக்க வேண்டுமென வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details