நீலகிரி: தோட்ட தொழிலில் தேயிலைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மலைக்காய்கறிகளான கேரட், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதால் இங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் இரவு, பகல் என பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கேத்தி பாலடா பகுதியில் உலகப்பன் என்பவருக்கு சொந்தமான SBA காரட் கழுவும் இயந்திர வளாக கிணற்றில், அங்கு வேலை செய்த பிரிய ரஞ்சன் மிஸ்ரா (வயது 33) என்பவரது உடல் பிரேதமாக கண்டெடுக்கப்பட்டது. கேத்தி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இரண்டு நாட்களாக பிரிய ரஞ்சன் மிஸ்ரா காணாமல் போனது தெரியவந்தது.