நீலகிரி: ஆந்திர மாநிலம் கடப்பாவிலிருந்து சுதர்சன் ரெட்டி என்பவர், கடந்த 5 நாட்களுக்கு முன்பு குடும்பத்துடன் நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா வந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்த்து விட்டு, கோத்தகிரி மலைப்பாதை வழியாக மேட்டுப்பாளையம் செல்லும்போது, அவர்களின் வாகனம் தட்டப்பள்ளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான சுற்றுலா வாகனம் - 17 பேர் படுகாயம்! - நீலகிரி
ஆந்திராவிலிருந்து நீலகிரிக்கு சுற்றுலா வந்த வாகனம் விபத்துக்குள்ளானதில், நான்கு குழந்தைகள் உள்பட 17 பேர் படுகாயமடைந்தனர்.
accident
இந்த விபத்தில் வாகனத்தில் பயணித்த நான்கு குழந்தைகள் உட்பட மொத்தம் 17 பேர் பலத்த காயமடைந்தனர். பின்னர் அனைவரும் 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் மூலம் கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போக்குவரத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: செல்போன் திருடிய இளைஞர்கள் சாலை விபத்தில் உயிரிழப்பு!