தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோத்தகிரி விவசாயிகள் போராட்டம்! - கோத்தகிரி விவசாயிகள் போராட்டம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாள்களாக பசுந்தேயிலைகளை கொள்முதல் செய்யாத தேயிலை நிறுவனங்களைக் கண்டித்து நாக்குபெட்டா விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

Kotagiri farmers protest
கோத்தகிரி விவசாயிகள் போராட்டம்

By

Published : Oct 10, 2020, 9:00 PM IST

நீலகிரி: தேயிலை கொள்முதலை நிறுத்திவைத்திருக்கும் நிறுவனங்களை உடனே கொள்முதல் செய்ய தென்னிந்திய தேயிலை வாரியம் உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

கோத்தகிரியில் தேயிலை விவசாயிகளிடமிருந்து கடந்த 10 நாள்களாக பசுந்தேயிலைகளை கொள்முதல் செய்யாமல் தேயிலை நிறுவனங்கள் இருந்துள்ளன.

இதனைக் கண்டித்து நாக்குபெட்டா விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமையில் இன்று (அக்.10) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோத்தகிரி விவசாயிகள் போராட்டம்

இந்நிலையில், இது சம்பந்தமாக தென்னிந்திய தேயிலை வாரியம் உடனடியாகத் தலையிட்டு இந்தப் பசுந்தேயிலைகளை கொள்முதல் செய்ய தேயிலை நிறுவனங்களுக்கு உத்தரவிட வேண்டும் என இப்போராட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இதே நிலை தொடர்ந்தால் வீடுகளின் கறுப்புக் கொடி ஏற்றி போராட்டம் செய்வோம் எனவும் எச்சரித்தனர்.

இதையும் படிங்க: 2 கிலோ எடையில் ஒரு எலுமிச்சைப் பழம்... ஆச்சரியத்தை ஏற்படுத்திய விவசாயி!

ABOUT THE AUTHOR

...view details