கொடநாடு பங்களாவில் காவலாளி மற்றும் ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட பத்து பேரில், சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மேலும், விசாரணைக்கு ஆஜராகாத ஜம்சீர் அலீ, மனோஜ்சாமி, சந்தோஷ்சாமி, தீபு, பிஜின்குட்டி உள்பட 10 பேருக்கு பிணையில் வெளியில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.