கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சயான், மனோஜ், தீபு, பிஜின்குட்டி உட்பட பத்து பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கொடநாடு வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணைக்கு சயான், மனோஜ் உள்பட 10 பேரும் நீதிபதி வடமலை முன்பு நேரில் ஆஜராகினர்.
சயன், மனோஜ் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் - உதகை நீதிமன்றம் - sayan
நீலகிரி: கொடநாடு கொலை வழக்கில் சயன், மனோஜ் உள்ளிட்ட பத்து பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடநாடு கொலை வழக்கு
அப்போது நீதிபதி வடமலை, பத்து பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்வதாக தெரிவித்தார். அப்போது சதீசன் உள்ளிட்ட எட்டு பேர் வழக்கிலிருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனுவை தங்களது ஒப்புதலின்றி வழக்கறிஞர் சிவக்குமார் திரும்ப பெற்றதாகவும், தங்களுக்கு மேலும் கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, அன்றைய தினமே பத்து பேர் மீதும் குற்றசாட்டு பதிவு செய்யப்படும் எனத் தெரிவித்தார்.