தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை வழக்கு விசாரணை செ.8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - உதகை ஒருங்கிணைந்த நீதிமன்றம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக மேற்கு வங்கத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இதனால், இன்று இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் வழக்கு விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jul 28, 2023, 3:39 PM IST

கோடநாடு கொலை வழக்கு விசாரணை செ.8ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

நீலகிரி: கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குடும்ப நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. கடந்த மாதம் ஜூன் 23ஆம் தேதி மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் முன்னிலையில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.

சிபிசிஐடி அதிகாரிகள் இதுவரை நடந்த விசாரணை அறிக்கையை இன்று நடைபெறும் விசாரணையில் இடைக்கால அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்

இந்நிலையில் இன்று (ஜூலை 28) நடைபெற்ற விசாரணையில், மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் இல்லாததால் குடும்ப நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கினை விசாரணை செய்த நீதிபதி ஸ்ரீதரன், வழக்கை எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

இந்த வழக்குத் தொடர்பாக கூடுதல் சாட்சிகள் இடையே விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிபிசிஐடி அதிகாரிகள், மற்றொரு குழு மேற்கு வங்கத்தில் விசாரணை நடத்தி வருவதால், விசாரணையை மேலும் விரிவுபடுத்த சிபிசிஐடி அதிகாரிகள் தலைமையில் கூடுதல் கால அகவாசம் கேட்கப்பட்டதால், வழக்கினை எதிர்வரும் செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அரசு சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் கூறுகையில், ''தற்போது வழக்குத் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் புலன் விசாரணை குறித்து நீதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்டது. எலக்ட்ரானிக் உரையாடல்கள் குறித்து குஜராத் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அறிக்கைகள் பெறவேண்டிய நிலை இருப்பதாலும், புலன் விசாரணை தொடர்பாக 19 செல்போன் டவர்களின் லொகேஷன்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளதாக நீதிபதியிடம் எடுத்துக் கூறப்பட்டது. இதனை கேட்டறிந்த நீதிபதி வழக்கு விசாரணையை செப்டம்பர் 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்” என்றார்.

இதையும் படிங்க:மணிப்பூர் விவகாரம் - நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details