நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கோடநாடு எஸ்டே்டில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கில் சயான், வாளையார் மனோஜ் உள்ளிட்ட 10 பேர் கை செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை, உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீதிபதி வடமலை முன்னிலையில், கோடநாடு கொலை வழக்கின் விசாரணை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. சயான் உட்பட 9 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
கோடநாடு கொலை வழக்கு; ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - கோடநாடு விசாரணை
நீலகரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.
உதகை மாவட்ட நீதிமன்றம்
இந்த வழக்கில் தொடர்புடைய சதீசன் குற்ற வழக்குகளில் கைதாகி கேரள சிறையில் உள்ளார். அதனால் உதகை நீதிமன்றத்தில் இன்று ஆஜராகவில்லை. இருதரப்பு விசாரணைக்கு பின்னர், சதீசனை வரும் 12ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்துமாறு காவல்துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், சயான், வாளையார் மனோஜ், தீபு, பீஜின், குட்டி ஆகியோரை நீதிமன்ற காவலில் வைக்கவும், வழக்கு விசாரணையை வரும் 12ஆம் தேதிக்கும் நீதிபதி ஒத்திவைத்தார்.