நீலகிரி:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் வாளையார் மனோஜ் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் இதுவரை நடத்திய விசாரணையின் தன்மையை குறித்து சிபிசிஐடி அதிகாரிகளிடம் நீதிபதி கேட்டறிந்தார்.
அதேபோல் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சார்பில் கூடுதல் சாட்சிகள் இடையே விசாரணை நடத்த நீதிபதியிடம் கூடுதல் கால அகவாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. இதனால், இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, வழக்கை எதிர்வரும் நவம்பர் 24ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், "கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியாக கூறப்பட்ட சேலத்தில் வாகன விபத்தில் உயிரிழந்த கனகராஜன் வழக்கினை சிபிசிஐடி அதிகாரிகள் தனி குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.