தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: விசாரணைக்கு ஒருநாள் கூடுதல் அனுமதி

கோடநாடு கொலை வழக்கில் தனபாலிடம் பத்து நாள் விசாரணை முடிந்த நிலையில், கூடுதலாக விசாரணை நடத்த காவல் துறையினர் அனுமதி கேட்டதற்கு, மேலும் ஒருநாள் கூடுதல் விசாரணைக்கு அனுமதி அளித்து குன்னூரில் உள்ள நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோடநாடு கொலை  நீலகிரி கோடநாடு கொலை  நீலகிரி கோடநாடு கொலை விசாரணை  கொலை வழக்கு  கொலை  கோடநாடு கொலை வழக்கு  kodanad estate  kodanad murder and heist  murder case  kodanad murder issue  kodanad murder case
கோடநாடு கொலை வழக்கு

By

Published : Nov 7, 2021, 3:59 PM IST

நீலகிரி:கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விசாரணையானது, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

இக்கொலை வழக்கிற்கு மூல காரணமாக இருந்த கார் ஓட்டுநர் கனகராஜ் சேலத்தில் விபத்தில் உயிரிழந்தார். இவரது மரணம் விபத்தா அல்லது கொலையா எனவும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை சம்பந்தமாக கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினரான ரமேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை காவல்துறையினர் விசாரணை செய்தனர். இதில் கோடநாடு கொள்ளை சதித்திட்டம் குறித்து தனபாலுக்கு முன்னதாகவே தெரிந்திருந்தும் காவல் துறையினர் விசாரணையில் அதை மறைத்துள்ளார் எனத் தெரியவந்தது.

நீலகிரி கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான விசாரணை

கூடுதல் விசாரணை

இதனால் தனபால் மற்றும் ரமேஷ் மீது உண்மையை மறைத்தல், கனகராஜின் செல்போன் பதிவுகளை அழித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் தனிப்படை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடந்த அக்டோபர் 25ஆம் தேதி அன்று கைது செய்து, கூடலூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவர்கள் இருவரையும் 10 நாள்கள் காவலில் விசாரிக்க உதகை மாவட்ட அமர்வு நீதி மன்றம் அனுமதி வழங்கியது. இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். தற்போது தனபாலிடம் பத்து நாள் விசாரணை முடிந்த நிலையில், நேற்று (நவ.6) குன்னூரில் உள்ள நடுவர் நீதிமன்றம் முன் நிறுத்தி கூடுதலாக ஐந்து நாள்கள் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர்.

காவல் துறையினரின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் ஐந்து நாள்கள் வழங்காமல், ஒருநாள் மட்டும் கூடுதல் விசாரணைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தனபால் பாதுகாப்பாக விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இன்று அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: ஏற்காட்டில் கூட்டுறவு பயிற்சி நிலையம் - கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டதை எதிர்த்து வழக்கு

ABOUT THE AUTHOR

...view details