ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
'உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது' - கொடநாடு குற்றவாளி கதறல்! - undefined
நீலகிரி: தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் ஜாமீனில் வெளிவர விரும்பவில்லை என்று கொடநாடு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வாளையாறு மனோஜ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணையின் போது சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி, மனோஜ், சதீசன், உதயக்குமார், ஜம்சீர்அலி, ஜித்தீன்ஜாய், மனோஜ்சாமி ஆகிய 10 பேரும் ஆஜராகினர். அப்போது, வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி சயான் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய மனுவிற்கு, அரசு தரப்பு வழக்கறிஞர் பதில் மனு தாக்கல் செய்தார்.
அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி ஆகியோரின் நீதிமன்ற காவலை நீட்டித்து வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 3-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்பின் நீதிமன்றத்திலிருந்து வெளியில் வந்த வாளையாறு மனோஜ் செய்தியாளர்களிடம் பேச முயன்றார். ஆனால், அவரை செய்தியாளர்களிடம் பேச விடாமல் போலிசார் அவரை வேகமாக அழைத்துச் சென்றனர். இருப்பினும் வாளையாறு மனோஜ் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், கேரளாவிலிருந்து தனக்கு அச்சுறுத்தல் வருவதால் ஜாமீனில் வெளியில் வர விரும்பவில்லை என்றும் கூறினார்.
TAGGED:
வாளையாறு மனோஜ்