கோத்தகிரி அருகே உள்ள கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அப்போது இரவு காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யபட்டார்.
இந்த வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில் வழக்கை மூன்று மாத காலத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று (செப்.8) மீண்டும் விசாரணைக்கு வந்தது. சயான் உள்பட 10 பேர் கண்டிப்பாக ஆஜராகுமாறு நீதிபதி கடந்த விசாரணையின் போது நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் இன்றைய விசாரணைக்கு சயான், வாளையாறு மனோஜ், மனோஜ்சாமி, உதயகுமார், ஜம்சீர்அலி, ஜித்தின் ஜாய, பிஜின் குட்டி ஆகியோர் மட்டுமே ஆஜராகினர். திபு, சதீசன், சந்தோஷ்சமி ஆகிய மூன்று பேர் ஆஜராகவில்லை.
இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கபட்டது. அன்றைய தினம் வழக்கில் தொடர்புடைய 10 பேரும் கண்டிப்பாக அஜராக வேண்டும் என நீதிபதி வடமலை உத்தரவிட்டார்.