மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிலதாவிற்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில், கடந்த 2017ஆம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ் உட்பட 11 பேர் மீது கோத்தகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதில், ஓட்டுநர் கனகராஜ் விபத்தில் உயிரிழந்தார். இது குறித்த வழக்கு உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தநிலையில், இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சயான் உட்பட 10 பேர் நேரில் ஆஜராகினர்.
கொடநாடு பங்களாவில் 200 கோடி ரூபாய் பணம் இருப்பதாகக் கருதி கனகராஜ், சயான், வாளையாறு மனோஜ், தீபு, பிஜின்குட்டி, உதயக்குமார், மனோஜ்சமி, ஜித்தின்ஜாய், சந்தோஷ்சாமி, ஜம்சீர்அலி, சதீசன் ஆகியோர் கொள்ளை அடிக்கத் திட்டம் தீட்டியதையும், பங்களா காவலாளி ஓம்பகதூரை கொலை செய்ததையும் முக்கிய குற்றசாட்டாக நீதிமன்றம் பதிவு செய்துள்ளது.