தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு வழக்கு : எந்த ஒரு சிசிடிவி ஆதாரமும் இல்லை

நீலகிரி: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக சிசிடிவி காட்சிகள், புகைப்படம் உள்ளிட்டவை நீதிமன்றத்தில் வழங்கவில்லை என, சயான் தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.

kodanad

By

Published : Jun 26, 2019, 9:19 PM IST

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், இன்று உதகை முதன்மை குற்றவியல் அமர்வு நீதி மன்றத்தில் நேரில் ஆஜராகினர். இதில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையிலிருக்கும் சயானை காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதேபோல், கோவை சிறையிலிருக்கும் வாளையார் மனோஜ், தீபு மற்றும் பிஜின்குட்டி ஆகியோரையும் காவல் துறையினரால் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேலும், ஜாமீனில் இருக்கும் மேலும் ஆறு பேர்களில் சதீசன் என்பவர் கேரளா சிறையில் இருப்பதால் ஆஜராகவில்லை.

விசாரணையின் போது, சயான் தரப்பு வழக்கறிஞர் வாதாடுகையில், "2017 ஏப்ரல் 24ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு குற்றம் நடைப்பெற்ற நிலையில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை கொலை வழக்காகப் பதிவு செய்யாமல் சதாரண வழக்காகப் பதிவு செய்யதுள்ளதாகவும், இந்த வழங்கில் எந்த சிசிடிவி அதரங்களும் இல்லை எனவும், இறந்ததாகக் கூறப்படும் நபரின் புகைப்படமும், அவர் இறந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் எதுவும் நீதிமன்றத்தில் வழங்கவில்லை. எனவே, இந்த கொலைக்கும் குற்றம் சாட்டப்பட்டுள்ள இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதனால், இந்த வழக்கிலிருந்து இவர்களை விடுவிக்கவேண்டும்" எனக் கூறினார்.

வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி வடமலை வழக்கை எதிர்வரும் ஜூலை 8ஆம் தேதி, குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details