நீலகிரி:உதகை அருகே தனியார் கலை கல்லூரி பட்டமளிப்பு நிகழ்ச்சி இன்று (நவ.1) நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு என்று பெயர் வைக்கப்பட்ட ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும் என்று அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு என்று பெயர் வைக்கபட்ட நாளைத்தான் தமிழ்நாடு தினமாக கொண்டாட வேண்டுமே தவிர, சீரமைப்பு செய்த நாளை அல்ல என்று தெரிவித்தார்.