தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 25, 2020, 9:56 AM IST

ETV Bharat / state

அத்துமீறி மீன் விற்ற கேரள மீன் வியாபாரிகள்: அபராதமும்... எச்சரிக்கையும்...!

நீலகிரி: கூடலூர் அருகே கேரளாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு அத்துமீறி வந்து மீன் விற்றவர்களுக்கு காவல் துறையினர் அபராதம் விதித்ததோடு, எச்சரித்தும் அனுப்பிவைத்தனர்.

கேரள மீன் வியாபாரிகள்
கேரள மீன் வியாபாரிகள்

நீலகிரி கூடலூர் அருகாமையில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மலப்புரம் மாவட்டம், வயநாடு மாவட்டங்கள் உள்ளன. இங்கு ஐந்து பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு பகுதிகளில் அதிக கட்டுப்பாடுகள் இருந்தும் சில கேரள பயணிகள், வியாபாரிகள் தமிழ்நாட்டில் அத்துமீறுவது தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில், நேற்று தமிழ்நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கேரள மாநிலத்தவர்கள் கூடலூர் பகுதிக்குள் டாடா ஏசி வாகனத்தின் மூலம் வந்து மீன்களை விற்பனை செய்துவந்துள்ளனர்.

இதனையறிந்த சில சமூக செயற்பாட்டாளர்கள், டாடா ஏசி வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். தங்களைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை எனக் கேரளாவிலிருந்து வந்த மீன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மீன் வண்டியை சேரம்பாடி காவல் நிலையத்திற்கு கொண்டுசென்று அபராதம் விதித்ததோடு எச்சரித்து கேரளாவுக்கு திருப்பி அனுப்பிவைத்தனர்.

எல்லைப்பகுதியில் அதிகமாகக் கட்டுப்பாடுகள் இருந்தும் இதுபோன்ற கேரள பயணிகள், வியாபாரிகள் அத்துமீறி நுழைந்து தமிழ்நாடு மக்களிடம் கரோனா பீதியை அதிகமாக்கிவருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனாவால் வாக்குவாதம்: ஒருவர் கொலை

ABOUT THE AUTHOR

...view details