தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காட்டேரி பூங்காவிற்கு குவியும் புகைப்படக் கலைஞர்கள்

நீலகிரி: காட்டேரி பூங்காவில் சுற்றுலாப் பயணிகளைவிட திருமண நிகழ்ச்சி புகைப்படக் கலைஞர்கள் அதிகளவில் குவிந்துவருகிறார்கள்.

காட்டேரி பூங்கா
Kattery Park

By

Published : Jan 7, 2020, 2:26 PM IST

நீலகிரி மாவட்டம் குன்னூரிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது காட்டேரி பூங்கா. இப்பூங்கா இயற்கை எழில் சூழ்ந்து அருவிகளின் அருகே அமைந்துள்ளதால் பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அமைவதுடன், ஏராளமான பறவைகளும் உலாவருகின்றன.

திருமண நிகழ்ச்சி புகைப்படக் கலைஞர்களின் முக்கிய இடமாக காட்டேரி பூங்கா உள்ளது. குறிப்பாக திருமணமான தம்பதிகளை புகைப்படங்கள் எடுக்க மற்ற மாவட்டங்களிலிருந்தும் அதிகளவில் பூங்காவிற்கு அழைத்து வருகின்றனர்.

பூங்கா அருகில் ரண்ணிமேடு ரயில்நிலையம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள சுவரோவியங்கள் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர், இங்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை காட்டிலும் இதுபோன்ற திருமண நிகழ்ச்சி புகைப்படத்திற்காக அதிகளவில் மக்கள் காட்டேரி பூங்காவிற்கு வந்துசெல்கின்றனர்.

பூங்காவிற்கு குவியும் புகைப்படக் கலைஞர்கள்

தற்போது குளிர்காலம் என்பதால், வானம் நீல நிறத்தில் மிகத் தெளிவாகக் காணப்பட்டு, மந்தமான வெயில் நிலவுகிறது. இந்த காலநிலையில் புகைப்படங்கள் எடுக்க தம்பதிகள் மட்டுமின்றி புகைப்படக் கலைஞர்களும் ஆர்வமுடன் தற்போது காட்டேரி பூங்காவில் குவிந்துவருகிறார்கள்.

இதையும் படிங்க: மார்கழி மாத வண்ண வண்ண கோலங்கள்!

ABOUT THE AUTHOR

...view details