தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கார்கில் வெற்றி தினம்; கவனம் ஈர்த்த மாணவர்களின் நாடகம் - நீலகிரி

கார்கில் போர் வெற்றி தினத்தைக் கொண்டாடும் வகையில், வெலிங்டன் ராணுவ மையத்தில் நுழைவு வாயில் முன்பு குன்னூர் தேசிய மாணவர் படை கல்லூரி மாணவர்கள் சார்பில் நாடக நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

கார்கில் வெற்றி தினம்; கவனம் ஈர்த்த மாணவர்களின் நாடகம்
கார்கில் வெற்றி தினம்; கவனம் ஈர்த்த மாணவர்களின்கார்கில் வெற்றி தினம்; கவனம் ஈர்த்த மாணவர்களின் நாடகம் நாடகம்

By

Published : Jul 26, 2022, 6:45 PM IST

நீலகிரி:கடந்த 1999ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த கார்கில் போரில் நமது இந்திய நாடு வெற்றி பெற்றது. இந்த வெற்றி தினம் ஆண்டுதோறும் ஜூலை 26ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 23ஆவது ஆண்டு வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கார்கில் போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களும், தற்போது உயிரோடு உள்ள ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், வெலிங்டன் ராணுவ மையத்தில் நுழைவு வாயில் முன்பு குன்னூர் தேசிய மாணவர் படைக்கல்லூரி மாணவர்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. கார்கில் போரின்போது நமது நாட்டு வீரர்கள் போரிட்டதை தத்ரூபமாக நாடக வாயிலாக நடித்துக்காட்டினர்.

இதில் ராணுவ அலுவலர்களும் பொதுமக்களும் கண்டு ரசித்தனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை லெஃப்டினண்ட் அலுவலர் சிந்தியா ஜார்ஜ், உள்ளிட்ட தேசிய மாணவர் படை மாணவிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

கார்கில் வெற்றி தினம்; கவனம் ஈர்த்த மாணவர்களின் நாடகம்

இதையும் படிங்க:கார்கில் வெற்றி தினம் கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details