நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அதில், 'செயற்கை முறையில் விவசாயம் செய்கையில், அதிக பூஞ்சானக் கொல்லி மருந்துகளால் விளைவிக்கப்படும் காய்கறிகளை மக்கள் உண்பதால் பல்வேறு நோய் உபாதைகள் அதிக அளவில் ஏற்படுகின்றன.
சிக்கிம் மாநிலத்தில் இயற்கை விவசாயத்தை மேற்கொள்வது போல், தற்போது தமிழ்நாடு அரசானது நீலகிரி மாவட்டத்தையும் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவித்திருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும்.
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு, தமிழ்நாடு அரசு தனி விலையைக் கொடுக்க முன்வர வேண்டும். அப்போது மட்டுமே இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் அதிக அளவில் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டுவார்கள். மேலும், மக்கள் வெங்காயத்தை உபயோகிப்பதை சிறிது நாட்கள் குறைத்துக்கொள்ள வேண்டும். இன்று அரசியலுக்கு வந்துள்ள நடிகர்களும், வரத் துடிக்கின்ற நடிகர்களும் 2021ஆம் ஆண்டில் கள் இயக்கத்துடன் வாதிட்டு கள் தடை செய்யப்பட வேண்டிய ஒரு போதை பொருள் தான் என நிரூபித்து விட்டால், அவர்களுக்கு உண்டான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்' இவ்வாறு தெரிவித்தார்.
இதையும் படிங்க: முல்லை நகர் மயான பூமியில் எரிவாயு இயந்திரம் பழுது: மாற்று இடத்தை பயன்படுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்!