நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி பகுதியைச் சேர்ந்தவர் விஜயரத்தினம் என்ற சுரேஷ்(22). இவர் கடந்த 2017ஆம் ஆண்டு அதேப் பகுதியைச் சேர்ந்த 6வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை - குற்றவாளிக்கு 10ஆண்டு சிறை - The nilgris district news
நீலகிரி: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றம் 10ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் பேட்டி
இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று மாவட்ட நீதிபதி முரளிதரன் குற்றவாளியான சுரேஷூக்கு 10ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ஐந்தாயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ. 4லட்சம் உதவி தொகை வழங்க வேண்டும் எனவும் உத்தவிட்டார்.
இதையும் படிங்க:13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு - வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை!