தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கவர்ந்திழுக்கும் ஊதா நிற ‘ஜெகரண்டா மலர்கள்’: சுற்றுலாப் பயணிகள் பரவசம்! - மலர்கள்

நீலகிரி: ஊதா நிற ஜெகரண்டா மலர்கள் நீலகிரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கண்களைக் கவரும் விதமாக பூத்துக் குலுங்குகின்றன.

nilgris

By

Published : Mar 20, 2019, 10:16 AM IST

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக பல்வேறு பூங்காக்கள் அமைக்கப்பட்டு, அவற்றில் விதவிதமான வண்ண மலர்ச்செடிகள் பராமரிக்கப்பட்டுவருகின்றன.

குன்னூர், உதகை, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் தோட்டக்கலைக்குச் சொந்தமான பல பூங்காக்கள் அனைவரையும் ஈர்க்கின்றன.

இந்நிலையில், குன்னூர், மேட்டுப்பாளையம் ம‌லைப்பாதையில் ஊதா நிற ஜெகரண்டா மலர்கள் பூத்துக்குலுங்கியுள்ளன. இந்த மலர்களின் அழகையும், அவற்றில் தேனீக்கள், தேன் உறிஞ்சும் காட்சியையும் ஆர்வத்துடன் காணும் சுற்றுலாப் பயணிகள், அவற்றை நினைவுகூறும் வகையில், புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர்.

ஜெகரண்டா மலர் வகைகள் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டு நடவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details